உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் பாலில் பால் விற்பனையாளர் ஒருவர் எச்சில் துப்புவதாகச் சில நாட்களாகத் தகவல் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து, ‘இந்து ஷேர் சேனா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட நபரை மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.
அப்போது, விற்பனையாளர் ஆரிப் என்பவர், பால் விநியோகம் செய்வதற்கு முன்னதாகப் பாலில் எச்சில் துப்புவதைத் தங்களின் கேமராவில் ஆதாரத்துடன் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபரை உடனடியாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பால் விற்பனையாளரின் பெயர் ஆரிப் என்பது தெரியவந்தது. தான் பாலில் எச்சில் துப்பவில்லை என்றும், பால் கெட்டுப் போய்விட்டதா என்று நுகர்ந்து பார்த்ததாகவும் அவர் விசித்திரமான காரணத்தைக் கூறினார்.
— Abhishek Yadav (@iabhiy) July 7, 2026
“>
இருப்பினும், கேமராவில் பதிவான ஆதாரத்தின் அடிப்படையில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
