சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஜிம்மில் ஒருவர் மிக அசாத்தியமாகப் ‘புல்-அப்ஸ்’ உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உடற்குறைபாடு என்பது மனதின் உறுதியை ஒருபோதும் முடக்கிவிட முடியாது என்பதைத் தனது ஒவ்வொரு முயற்சியிலும் நிருபித்துள்ள அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கைக் காட்சி, இணையவாசிகள் பலரையும் ஆச்சரியத்திலும் மெய்சிலிர்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

உடல் ரீதியான தடைகளைத் தாண்டி அவர் காட்டியுள்ள இந்த அசாதாரணமான மனவலிமை, இன்று உலகளவில் பலருக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக மாறியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், சக்கர நாற்காலியில் வந்திறங்கும் அந்தப் பெண், தனது உடலின் கீழ் பகுதிக்குச் சற்றும் ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும், மேல் உடலின் பலத்தை மட்டுமே முழுமையாக நம்பி, கம்பியைப் பிடித்து மிக எளிதாகப் புல்-அப்ஸ் செய்கிறார்.

சாதாரணமாக ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்களுக்கே பெரும் சவாலாக இருக்கும் இந்த உடற்பயிற்சியை, அவர் எந்தவிதத் தயக்கமுமின்றி, மிகுந்த தன்னம்பிக்கையோடு செய்து முடிப்பது காண்போரை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. தனது குறையை எண்ணி வீட்டிற்குள் முடங்கிவிடாமல், ஜிம்மிற்கு வந்து கடுமையாக உழைத்துத் தன் பலத்தை நிரூபித்திருக்கும் அவருடைய இந்தச் செயல் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

இந்தப் பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணை ‘சூப்பர் வுமன்’ என்றும் ‘உண்மையான சாம்பியன்’ என்றும் சமூக வலைதளங்களில் தலையில் தூக்கி வைத்துப் பாராட்டி வருகின்றனர். “நமக்குச் சின்னச் சின்ன தடைகள் வந்தாலே சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடும் இந்தச் சமூகத்திற்கு, இந்தப் பெண் ஒரு மாபெரும் பாடம்” என்று பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உடல் அசைவுகளை விட மனதின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையே ஒரு மனிதனை உயர்த்தும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் இந்தப் பெண்ணின் வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

“>