ஐஐடி போம்பே போன்ற இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்று, அனைவரின் கனவு வேலையான இஸ்ரோ அமைப்பின் பணி வாய்ப்பையே நிராகரித்துவிட்டு, சொந்தமாக தொழில் தொடங்கும் துணிச்சலான முடிவை எடுத்தவர் தான் மனோஜ் மீனா.

பலரும் பாதுகாப்பான எதிர்காலத்தையும், நிலையான வருமானத்தையும் தேடி ஓடும் சூழலில், தனது சொந்தக் கனவின் மீது நம்பிக்கை வைத்து இவர் எடுத்த இந்த முடிவு, ஆரம்ப காலத்தில் இவரைப் பல கடினமான பரிசோதனைகளுக்கு உள்ளாக்கியது. இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வேலையை வேண்டாமென்று மறுத்தபோது, சுற்றிலும் இருந்தவர்கள் இவரை வியப்பாகவும் ஒருவித சந்தேகத்துடனும் பார்த்தனர்.

தொழில்முனைவு என்ற பாதையைத் தேர்ந்தெடுத்த மனோஜ் மீனாவிற்கு ஆரம்ப கட்ட வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. கைவசம் இருந்த சேமிப்புத் தொகை அனைத்தும் கரைந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குக் கூடப் பணமின்றி முழுமையாகக் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடிய அந்தப் பேரிருளான காலக்கட்டத்திலும், அவர் தனது முயற்சியையோ, தனது தயாரிப்பின் மீதிருந்த நம்பிக்கையையோ சிறிதும் கைவிடவில்லை. பண நெருக்கடியும் தோல்விப் பயமும் சூழ்ந்த அந்த மிகக் கடினமான தருணங்களை, தனது அசைக்க முடியாத தன்னம்பிக்கையாலும் உழைப்பாலும் மட்டுமே எதிர்கொண்டு போராடினார்.

அந்த இடைவிடாத போராட்டத்திற்கும் உறுதியான உழைப்பிற்கும் கிடைத்த பரிசாக, இன்று அவர் உருவாக்கிய நிறுவனம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மாபெரும் சாம்ராஜ்யமாக உயர்ந்து நிற்கிறது. இஸ்ரோ வேலையை மறுத்து, கையில் பணமில்லாமல் தவித்த ஒரு சாதாரண இளைஞன், இன்று ஆயிரம் கோடி மதிப்பிலான நிறுவனத்தின் அதிபராக உருவெடுத்துள்ள இந்த வெற்றிப் பயணம், இந்திய இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தோல்விகளும் நிதி நெருக்கடிகளும் தற்காலிகமானவைதான், உண்மையான திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த நிலையிலிருந்தும் இமயத்தொடு சாதனையைப் படைக்க முடியும் என்பதை மனோஜ் மீனாவின் இந்த வாழ்க்கை வரலாறு தெள்ளத்தெளிவாக உலகிற்கு உணர்த்துகிறது.