ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு நடந்த ஒரு அதிர்ச்சியளிக்கக்கூடிய நிகழ்வு, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் உலுக்கியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய தலைமை ஆசிரியரே, மாணவிகளுடன் ஆடையின்றி அணையில் குளித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டம் தானகாஜி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழா முடிந்ததும், பள்ளி முதல்வர் மாணவ-மாணவிகளைச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், நீச்சல் கற்றுத் தருவதாகவும் கூறி பள்ளியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘படஜ் அணை’ பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சுற்றுலாவில் 20 முதல் 25 வரையிலான பெரிய மாணவிகளும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
अलवर में बिना कपड़ों के छात्राओं के साथ नहाते दिखे प्रिंसिपल साहब, ग्रामीणों का आरोप-तैराकी के बहाने छात्राओं को ले गए बांध।@DMDCAlwar @rajeduofficial @madandilawar @RajGovOfficial #Principal #SchoolNews #StudentSafety #viralvídeo #RajasthanNews #EducationNews #BreakingNews pic.twitter.com/PUixK5TEB7
— INDIA NEWS RAJASTHAN (@raj_indianews) August 22, 2026
ஆனால், அங்கு நடந்த நிகழ்வுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும், லைஃப் ஜாக்கெட்டுகளும் இன்றி மாணவிகள் தண்ணீருக்குள் இறக்கிவிடப்பட்டனர். மேலும், அணைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி ஆபத்தான முறையில் மாணவிகளுடன் முதல்வர் தண்ணீரில் குளித்துள்ளார்.
அங்கு நடந்த அநாகரிகச் செயலை அங்கிருந்த சிலர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது காட்டுத் தீயாய் பரவியது. வீடியோவில் முதல்வர் மாணவிகளுடன் ஆபாசமான முறையில் நீராடும் காட்சிகள் வெளியாகி கிராம மக்களையும் பெற்றோர்களையும் கொதித்தெழச் செய்தது.
உடனடியாகக் கிராம மக்கள் பள்ளிக்குத் திரண்டு வந்து முற்றுகையிட்டதுடன், காவல்துறைக்கும் கல்வித்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டனர். முதல்வரின் இந்த நெறிமுறையற்ற செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
