உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், சாப்பிட்டு முடித்த பின் பில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண தகராறில், தன்னை வக்கீல் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் ஹோட்டல் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, 15-க்கும் மேற்பட்ட அடியாட்களைத் திரட்டி வந்து ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெல்ட்டால் அடித்த பெரும் வன்முறைச் சம்பவம் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 2-ம் தேதி நடந்த இந்த விபரீத சம்பவத்தின்போது, அந்த ரவுடிக் கும்பல் ஹோட்டலுக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலி, கண்ணாடி உள்ளிட்ட அத்தனை பர்னிச்சர்களையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளனர்.

 

“>

ஹோட்டல் ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கும் இந்த அராஜகக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வக்கீல் என்று மிரட்டிய நபர் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.