தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
ஆடு திருடிய குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களைக் கூட அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கும் விந்தையான அவலம் தவெக ஆட்சியில் அரங்கேறி வருவதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்த அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்குப் பின்னால் பல லட்ச ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித அனுபவமும் இல்லாதவர்கள் எல்லாம் ஒன்று கூடி மடம் கட்டுவதைப் போல, தவெகவினர் ஒரு அரைகுறை ஆட்சியைத் தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
