ஓடும் ரயிலில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்து ரீல்ஸ் போடுவதே பெரிய தலைவலியாக இருக்கும் நிலையில், தற்போது முதியவர் ஒருவர் செய்துள்ள விபரீத காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு ரயிலின் வாசலில் நின்றுகொண்டு, அந்த முதியவர் தனது உயிரைப் பணையம் வைத்து மிகவும் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்துள்ளார்.

;

சற்றே பிடி நழுவினாலும் மரணம் நிச்சயம் என்ற சூழலில், அவர் செய்த இந்த விபரீத விளையாட்டு அங்கிருந்த பயணிகளை பதற வைத்துள்ளது. ​இந்த பகீர் ஸ்டண்ட் தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியாகி, இணையவாசிகளிடையே தீயாய் பரவி வருகிறது. “இந்த வயதில் உங்களுக்கு இப்படி ஒரு ஆபத்தான தேவையா?” என்றும், “ரயில்வே போலீஸார் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.