ஹைதராபாத் சரூர்நகரில் அரங்கேறியுள்ள இந்த நூதன கொள்ளை சம்பவம், திருடர்களின் அடுத்தகட்டே பிளானைக் காட்டியுள்ளது. சாலையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் பைக்கில் வந்த ஆசாமி ஒருவன், வண்டியை கீழே போடுவது போல நாடகமாடியுள்ளார். பைக் கீழே விழுந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், நடந்து வந்த நபர் பதறியடித்து ஓடிச் சென்று அந்த பைக்கைப் பிடித்துள்ளார்.
அவர் பைக்கைப் பிடிக்கும் அந்தச் சில நொடிக் கேப்பில், பின்னால் வந்த இன்னொரு திருடன், பைக்கைத் தூக்க உதவிய நபரின் பாக்கெட்டில் இருந்த ₹1 லட்சம் மதிப்புள்ள மொபைல் போனை அலாக்காக அமுக்கியுள்ளான். போனைத் தூக்கிய அடுத்த நொடியே, பைக்கில் இருந்த ஆசாமியுடன் சேர்ந்து கொண்டு இருவரும் அதே வண்டியில் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
🚨 Police say two men in Saroornagar, Hyderabad, allegedly pretended to fall on the road to distract a passerby before stealing his 1 lakh mobile phone and fleeing on a motorcycle without a number plate… pic.twitter.com/AnRiZwbJVf
— SriSathya (@sathyashrii) July 5, 2026
அவர்கள் சென்ற பிறகுதான் தன் போன் திருடப்பட்டதே அந்த நபருக்குத் தெரியவந்துள்ளது. இந்த நூதன திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களைத் தேடி வருகின்றனர்.
