பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், தன் மகளின் கல்விக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஒரு தந்தை 10 ஆண்டுகளாக அரங்கேற்றிய பாசப் போராட்டம் உலகையே நெகிழ வைத்துள்ளது. அங்கு பெண்கல்வி மற்றும் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும் நிலையில், தன் மகள் சுதந்திரமாக நடமாடவும், பள்ளிக்குச் சென்று படிக்கவும் அந்த தந்தை ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.
ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய வழக்கமான “பச்சா போஷ்” (Bacha Posh) முறையைப் பயன்படுத்தி, தன் மகளுக்கு ஆண் போல தலைமுடியை வெட்டி, ஆண் ஆடைகளை உடுத்தி, ஒரு ஆண் பெயரையும் சூட்டி கடந்த 10 வருடங்களாக உலகிற்கு அவளை ஒரு ஆண் பிள்ளையாகவே வளர்த்து வந்துள்ளார். சமூகம் ஒரு பெண்ணுக்கான அடிப்படை உரிமைகளை மறுக்கும் போது, தங்களது மகள்களுக்குக் கல்வியையும் நல்வாய்ப்புகளையும் பெற்றுத்தர பெற்றோர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது.
தாலிபான்களின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், தன் மகளைப் பாதுகாத்தது மட்டுமன்றி அவளுக்கு ஒரு சுதந்திரமான சிறுபிராயத்தையே இந்த தந்தை பரிசாக அளித்துள்ளார். தற்போதைய இக்கட்டான சூழலில், இந்தத் தந்தையின் அமைதியான புரட்சியும், தியாகமும் இணையவாசிகளிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருவதோடு, இந்த எமோஷனல் ஸ்டோரி சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ஷேர் ஆகி வருகிறது.
