பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் கழுத்தில் அணியும் ஐடி கார்டு கயிற்றில் எவ்வளவு பெரிய உயிர் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பதை விளக்கி, பிரபல குழந்தை மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள நேரடி விழிப்புணர்வு வீடியோ தற்பொழுது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் ஐடி கார்டு கயிற்றை வைத்து, தமிழ்நாட்டில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் பொருளுக்கும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் பொருளுக்கும் இடையே உள்ள அதிரடியான பாதுகாப்பு வித்தியாசத்தை அந்த மருத்துவர் நேரலையாகச் செய்து காட்டியுள்ளார்.

நம்ம ஊர் பள்ளிகளில் கொடுக்கப்படும் ஐடி கார்டு கயிறு, விளையாடும் போதோ அல்லது எதிர்பாராத விதமாகவோ எதிலாவது மாட்டிக் கொண்டு குழந்தையின் கழுத்தைப் பிடித்து இழுத்தால், அது அப்படியே இறுக்கமாக கழுத்தை நெரிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், அதே சமயம் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஐடி கார்டு கயிறுகள், யாராவது பலமாகப் பிடித்து இழுக்கும் போது, அந்த லாக் பகுதியில் ‘ஸ்டாப்’ ஆகி, கழுத்தை நெரிக்காமல் இரண்டு பாகங்களாகத் தானாகவே பிரிந்து விழுந்து விடுகிறது.

 

“>

தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளில் உள்ளதைப் போன்ற ஆபத்து இல்லாத, பாதுகாப்பான ஐடி கார்டுகளை மட்டுமே பள்ளிகளில் பயன்படுத்த அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என்று மருத்துவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மத்தியில் இந்த வீடியோ தற்பொழுது பரவி வருகிறது.