இங்கிலாந்தையே மிரட்டிய 15 வயது இந்திய சிறுவன்.. “வயசு சர்டிபிகேட்டை பார்க்காதீங்க” இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயது ஆன இளம் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானது குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான வசிம் அக்ரம் பேசியது உலக கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளில் ஒரு மைக்ரோ செகண்ட் கூட பயமே இல்லாமல் இரண்டு பிரம்மாண்ட சிக்சர்களைப் பறக்கவிட்டு வைபவ் மிரட்டியிருந்தார். இருப்பினும், இவ்வளவு சிறிய வயதில் அவரை சர்வதேச கிரிக்கெட்டிற்குள் அவசரமாகக் கொண்டு வந்திருக்கக் கூடாது எனச் சிலர் விமர்சித்து வந்த நிலையில், இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ள வசிம் அக்ரம், “இணையத்தில் அவர் மிகவும் சிறிய பையன், அவசரப்பட்டு வாய்ப்பு கொடுத்துவிட்டார்கள் என்றெல்லாம் விமர்சித்து வருவதைப் பார்த்தேன்.
“Stop checking his age certificate!” — Wasim Akram on Vaibhav Suryavanshi’s🚨😱🗣️
“I am reading comments online from people saying he is too young, he shouldn’t be rushed, blah blah. Look at what the boy did on his very first assignment! He walked onto that Old Trafford floor,… pic.twitter.com/TPkjewoxFO
— sportified (@sportified25) July 5, 2026
“>
ஒரு குழந்தைக்கு அந்த அசாத்தியமான திறமை இருக்கும் போது, அவனைப் பென்சில் உட்கார வைக்காமல் சுதந்திரமாகப் பறக்க விட வேண்டும்” என்று தேர்வுக் குழுவிற்கு ஆதரவாகத் தனது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஜாம்பவான் வசிம் அக்ரமின் இந்த அதிரடி அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
