சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் கீர்த்தனா அவர்கள் விருதுநகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வகுப்பறையில் நுழைந்த அவர், அங்கிருந்த மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆங்கிலத்தை மனப்பாடம் செய்ய வைக்கக் கூடாது என்றும், அவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்த ஆசிரியைக்கு அறிவுறுத்தினார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் (X) தளத்தில் அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டு தற்போதைய அமைச்சர் கீர்த்தனாவை கடுமையாகச் சாடியுள்ளார். அதில், தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணியோ, அமைச்சரின் பணியோ அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச்… pic.twitter.com/yyAOmYqhml
— Dr. Anbil Mahesh (@Anbil_Mahesh) July 6, 2026
மேலும், “மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, ‘லாஸ்ட் பெஞ்ச்’ என்று சுட்டிக்காட்டிப் பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள்; மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்” என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தப்போ சரியோ தைரியமாகப் பதில் சொன்ன மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
