ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் என்பதற்கு உதாரணமாக டெல்லியைச் சேர்ந்த கனிகா அரோரா என்ற பெண்ணுக்கு அபுதாபி பிக் டிக்கெட் குலுக்கலில் ரூ.58 கோடி முதல் பரிசு அடித்து ஒரே இரவில் கோடீஸ்வரியாக கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புகழ்பெற்ற “பிக் டிக்கெட் – 288” குலுக்கலில் 476107 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை சும்மா வாங்கிப் பார்ப்போம் என கனிகா வாங்கியிருந்த நிலையில், அவருக்கு பிக் டிக்கெட் வெற்றியாளர் நீங்கள்தான் என போன் மூலம் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அவர், இவ்வளவு பெரிய தொகை பரிசாககிடைக்கும் என நான் நம்பவே இல்லை என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இவரைப் போன்றே துபாயில் வசித்து வரும் டிவிங்கிள் அல்பின் என்ற மற்றொரு இந்தியருக்கு பிஎம்டபுள்யூ சொகுசு கார் பரிசாக கிடைத்துள்ளது.
இந்திய மதிப்பில் தலா ரூ.2.3 கோடி பரிசாய் அகில், சிவபிரசாத், உபேந்திரன், லான்சி பைஸ் உள்ளிட்ட 5 இந்தியர்கள் தட்டித் தூக்கி அமீரகத்தில் சிக்கியுள்ளனர்.
