சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்ஸ் பெறுவதற்காக, சிலர் எத்தகைய கீழ்த்தரமான செயல்களில் இறங்குகிறார்கள் என்பதற்கு இந்த ‘ஈ-ரிக்ஷா பிராங்க்’ ஒரு மோசமான உதாரணமாகும். ஒரு குறிப்பிட்ட ‘ஸ்மார்ட் ஆப்’ மூலம் சாலையில் செல்லும் ஏழை ரிக்ஷா ஓட்டுநர்களின் வாகனத்தை திடீரென லாக் செய்து, அவர்கள் படும் அவஸ்தையை வேடிக்கை பார்க்கும் இந்தச் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஒரு நாள் முழுவதும் உழைத்தால் மட்டுமே அன்றைய உணவிற்கான வருமானத்தைப் பெறக்கூடிய ஏழைத் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை, வெறும் பொழுதுபோக்கிற்காகவும் கண்டென்ட் உருவாக்குவதற்காகவும் சிதைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

இந்த வீடியோவில், ஒரு முதிய ரிக்ஷா ஓட்டுநர் தனது அன்றைய வருமானம் பறிபோனதால் செய்வதறியாது திகைத்து அழுதுகொண்டிருக்கும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. இதற்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ள நெட்டிசன்கள், இதுபோன்ற கேவலமான செயல்களைச் செய்யும் நபர்கள் பயன்படுத்தும் அந்த செயலியை உடனடியாகத் தடை செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

“>

 

“மற்றவர்களின் உழைப்பைத் தங்களுக்குப் பொழுதுபோக்காக மாற்றிக்கொள்ளும் இவர்களுக்கு, அதேபோன்ற துயரம் ஒருநாள் வரும்போதுதான் அதன் வலி புரியும்” என பலரும் தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.