மத்தியப் பிரதேச மாநிலத்தில், திருமணமாகி வெறும் 52 நாட்களே ஆன மணிஷா படேல் என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டு சமையலறையில் தூக்கிட்டு நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் இது சாதாரண தற்கொலை என்று கருதப்பட்ட போதிலும், போலீசாரின் தீவிர விசாரணையில் கைப்பற்றப்பட்ட மணிஷாவின் மொபைல் போன் உரையாடல்கள் இந்த வழக்கிற்கு முற்றிலும் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளன. மணிஷா திருமணத்திற்கு முன்பிருந்தே தனது அக்காவின் கணவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் தங்களது குடும்பங்களை உதறிவிட்டு ஒன்றாக இணைந்து வாழத் திட்டமிட்டிருந்தனரா என்ற கோணத்திலும் போலீசார் தற்பொழுது சந்தேகிக்கின்றனர்.
இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, மணிஷாவின் குடும்பத்தினரும் கணவர் தரப்பினரும் இந்த மரணத்தின் உண்மைத் தன்மையை அறிய நீதி விசாரணை கோரியுள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரி, கைப்பற்றப்பட்ட மொபைல் போன் உரையாடல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து அனுப்பியுள்ளதாகவும், விசாரணை முடிவிலேயே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது உறுதியாகத் தெரியவரும் என்பதால் எந்த முடிவையும் அவசரமாக எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
