சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ரயில் கேட் போடப்பட்ட பிறகும் அவசரப்பட்ட நபர் ஒருவர், தனது பைக்கை ரயில் தண்டவாளத்தின் குறுக்கே எடுத்துச் செல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாதையில் வந்த ரயில், தண்டவாளத்தில் சிக்கியிருந்த அந்த பைக்கை மோதிச் சுக்குநூறாகச் சிதறடித்தது. நல்லவேளையாக அந்த நபர் கடைசி நேரத்தில் பைக்கைக் கைவிட்டுத் தப்பியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

“>

 

ரயில் கேட் மூடப்பட்டிருக்கும்போது தண்டவாளத்தைக் கடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.