இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி, பெரியவர்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையிலான குட்டி சிறுவன் ஒருவனின் அசாத்தியமான அறிவுத்திறன் கொண்ட காணொளி தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. பொதுவாகப் பெரியவர்களுக்கே சட்டென்று குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல் மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்த வித்தியாசங்களை, அந்தச் சிறுவன் மிக எளிய நடையில், அற்புதம் வாய்ந்த பொது அறிவோடு விளக்கியிருப்பது ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அந்தக் காணொளியில் முதலில் இடி (ED) ரைடு மற்றும் ஐடி (IT) ரைடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அந்தச் சிறுவன் மிகக் கச்சிதமாகக் கூறுகிறான். அதாவது, “ஈடி ரைடு என்பது உங்களிடம் இருக்கும் காசு எப்படி, எந்த வழியில் வந்தது என்பதை விசாரிப்பவர்கள்; அதுவே ஐடி ரைடு என்பது நீங்கள் முறையாக வரி செலுத்தாமல் மறைத்து வைத்துள்ள காசைப் பற்றி விசாரிப்பவர்கள்” என்று மிகத் தெளிவாகப் பொளேரென்று விளக்குகிறான்.
அதைத் தொடர்ந்து, கவர்னருக்கும் சீப் மினிஸ்டருக்கும் (முதல்வர்) உள்ள பவர் பாலிடிக்ஸ் குறித்துப் பேசுகையில், “கவர்னரை மத்திய அரசு (Central Government) நேரடியாகத் தேர்ந்தெடுக்கும், அவருக்கு உண்டான அதிகாரம் என்பது மிகக் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது (Limited Power). ஆனால், சீப் மினிஸ்டரை மக்கள் தங்களது வாக்குகள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள், அதனால் அவருக்குத்தான் முழு அதிகாரமும் (Full Power) இருக்கும்” என்று அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கிறான்.
<script async src=”//www.instagram.com/embed.js”></script>
இறுதியாக, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்துப் பேசும் அந்தச் சிறுவன், “லோக்சபாவிற்கான எம்பிக்களை (உறுப்பினர்களை) மக்கள் தங்களது ஓட்டுகள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள். அதேநேரம், ராஜ்யசபாவிற்கான உறுப்பினர்களை அந்தந்த மாநிலங்கள் தான் தேர்ந்தெடுத்து அனுப்பும்” என்று மிக அற்புதமாகப் பேசி அசத்தியுள்ளான். அரசியல் மற்றும் பொது அறிவை விரல் நுனியில் வைத்துள்ள இந்த சுட்டிப் பையனின் அறிவுப்பூர்வமான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்களின் ஏகோபித்த பாராட்டுகளுடன் செம்ம வைரலாகி வருகிறது.
