இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி, பார்ப்போரின் நெஞ்சை ஒரு நிமிடம் பதற வைக்கும் வகையிலான பரபரப்பான காணொளி ஒன்று தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் ரயிலின் நுழைவு வாயில் (படிகட்டு) அருகே ஆபத்தான முறையில் நின்று கொண்டு வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா சடாரென நழுவி, கீழே தண்டவாளப் பகுதியில் விழுந்து விடுகிறது. ​அதே சமயம், அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர், துப்பட்டா கீழே விழுந்ததைப் பார்த்ததும் சற்றும் யோசிக்காமல், தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று கூட நினைக்காமல், திடீரென தண்டவாளப் பகுதியில் இறங்கி அந்த துப்பட்டாவை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

<script async src=”//www.instagram.com/embed.js”></script>

ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளப் பகுதிகள் எப்போதுமே அதிக ஆபத்து நிறைந்தவை என்பதால், ஒரு துப்பட்டாவுக்காக அந்த இளைஞர் இப்படி உயிரைப் பணயம் வைத்து இறங்கியது பார்ப்பவர்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், “உதவி செய்வது நல்லதுதான் என்றாலும், ரயில்கள் வரும் பாதையில் இப்படி ஆபத்தான முறையில் உயிரை விடுத்துச் செயல்படக் கூடாது” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களையும், அறிவுரைகளையும் கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகிறார்கள்.