கேதன் அகர்வால் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தியா கோயல், விசாரணைக்காகப் புனே புறநகர் காவல் துறையினரால் லல்லா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது அவர் ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கண்ணியமற்ற முறையில் சைகை செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த வீட்டில் வைத்து, ஜூன் 18-ம் தேதி லோகட் கோட்டையில் இருந்து அகர்வாலைத் தள்ளிவிட்டு அவர் கொல்லப்பட்டபோது, தியா கோயல் அணிந்திருந்ததாகக் கருதப்படும் ஆடைகளை காவல்துறை கைப்பற்றியுள்ளது.
இந்தக் கொலையைச் செய்வதற்குச் சில வாரங்களுக்கு முன்பே, லல்லா நகரில் உள்ள ஒரு கிளப் அருகே தியா கோயலும், அவரது காதலர் சேத்தன் சௌத்ரியும் அகர்வாலை எப்படி மலையிலிருந்து கீழே தள்ளிவிடுவது என்று ஒத்திகை பார்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இடத்தையும் தியா கோயல் போலீஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.
#WATCH | Siya Goyal Flashes Middle Fin*er At Media While Being Escorted By Pune Police In Ketan Agarwal Murder Probe
Read: https://t.co/wM789AdOCL@AnkitShukla5454 #Pune #PuneNews #SiyaGoyal #KetanAgarwal #Maharashtra pic.twitter.com/WQs4aR2ftr
— Free Press Journal (@fpjindia) July 2, 2026
“>
இதற்கிடையில், இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் ‘பாலிகிராஃப்’ எனப்படும் பொய் கண்டறியும் சோதனையைச் செய்ய அனுமதிக்குமாறு வட்கான் மாவல் நீதிமன்றத்தை காவல்துறை நாடியுள்ளது. தடயவியல் ரீதியான பல தொழில்நுட்ப ஆதாரங்கள் திரட்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
