சூரத் மாவட்டம் சச்சின் பகுதியில் உள்ள இக்லேரா என்ற இடத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி ஆர்த்தி பாரியா மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினக்கூலி வேலை செய்யும் பெற்றோருடன் அங்கு வந்த அந்தச் சிறுமி சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.

மோதிய வேகத்தில் சிறுமி தூக்கி வீசப்பட்ட நிலையில், அந்த காரின் சக்கரங்கள் சிறுமியின் உடல் மீது ஏறிச் சென்றன. ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

“>

 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பி ஓடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.