தெலங்கானா மாநிலத்தில் அபிலாஷ் என்பவருடன் 18 மாதங்களுக்கு முன்பு திருமணமான சுஷ்மிதா என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், தனது வயிற்றில் வளரும் குழந்தை வேறு யாருக்கோ பிறந்தது என்று கூறி கணவன் மற்றும் மாமியார் தொடர்ந்து கொடுத்த கடுமையான சந்தேக டார்ச்சரால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த உலுக்கியுள்ளது.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி சுஷ்மிதாவின் தாய் மகளின் வீட்டிற்கு வளைகாப்பு விழா குறித்துப் பேசச் சென்றபோது, அங்கேயும் மருமகனும் மாமியாரும் சேர்ந்து குழந்தையின் பிறப்பைச் சந்தேகப்பட்டு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என வற்புறுத்திப் பயங்கர சண்டையிட்டதுடன், குடும்பப் பெரியவர்கள் பேசியும் கேட்காமல் சுஷ்மிதாவுக்குத் தொடர்ந்து கடுமையான உடல் மற்றும் மன ரீதியான வன்முறைகளைக் கொடுத்து வந்துள்ளனர்.
இந்தச் சந்தேகக் கொடுமைகளுக்குப் பயந்து வாழ விரும்பாத சுஷ்மிதா தனது 5 மாதக் கருவோடு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தாயின் புகாரின் பேரில் போலீஸார் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணவன் அபிலாஷ் மற்றும் அவரது தாயை கைது செய்துள்ள விபரம் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
