“எங்க தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பணி செய்யத் தெரியுமே தவிர, உங்களைப் போல மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது; எங்க ஆட்சிக்கு நாள் குறிக்கிறவங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நல்லா கவனிச்சுட்டுதான் இருக்காங்க !”
என்று தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை அக்குவேறாகப் பிரித்து மேய்ந்து ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்திருப்பது கோட்டை வட்டாரத்தில் மாபெரும் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், “கடந்த கால நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வந்ததில் இருந்தே கண்ணைக் கட்டுகிறது; எங்களுக்குத் தங்கத்தை உருக்கித் தாரை வார்க்கத் தெரியாது, புதிய பணியிடங்களை உருவாக்கத் தெரியுமே தவிர, அதை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்கத் தெரியாது” என்று அறிவாலயப் பாசறையை நோக்கிப் பாய்ந்து அசுரத்தனமான அம்புகளை வீசியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த அதிரடி ருத்ரதாண்டவப் பேச்சு தற்பொழுது தமிழகத்தை அடியோடு ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
