“நிதி ஆயோக் கூட்டத்துல போய் வாசிச்ச சாதனை எல்லாம் வெறும் 40 நாள்ல செஞ்சிருக்க முடியாது, அதுக்கு முன்னாடி இருந்த திமுக ஆட்சிதான் காரணம்னு நீங்களே சொல்றீங்களே;

அப்போ தமிழ்நாட்டுல இப்போ தலைவிரிச்சு ஆடுற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கும், போதைப்பொருள் நடமாட்டத்துக்கும் அதே 5 வருஷ திமுக ஆட்சிதானேப்பா காரணம்!” என்று தமிழக அமைச்சரும் தவெகவின் முக்கியத் தலைவருமான ராஜ்மோகன் அவர்கள் சட்டமன்றத்தில் திமுகவை நோக்கி வீசியுள்ள அசுரப் பாய்ச்சல் அறிவாலயப் பாசறையையே நிலைகுலைய வைத்துள்ளது.

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் வாசித்த தமிழகத்தின் வளர்ச்சிப் பட்டியலை, 40 நாள் தவெக ஆட்சியில் சாத்தியமில்லை என திமுகவினர் விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், “நீங்களே உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி; தற்போதைய ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் கடந்த திமுக ஆட்சிதான் முழுமுதற் காரணம்” எனப் புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.