அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வாடகை வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக தூங்கிவிட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. சமையல் எரிவாயு அடுப்பில் வைக்கப்பட்ட உணவு, நீண்ட நேரமாக கவனிக்கப்படாமல் இருந்ததால் முற்றிலும் கருகி, வீடு முழுவதும் அடர்ந்த புகை மூட்டமாக மாறியுள்ளது. இந்த புகை அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவியதால், விபரீதத்தை உணர்ந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த வீட்டின் முன்பு குவிந்தனர்.
View this post on Instagram
வீட்டிற்குள் இருந்து எந்தவொரு பதிலும் வராததால் அச்சமடைந்த பொதுமக்கள், உடனடியாக வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அறை முழுவதும் புகை சூழ்ந்திருந்த நிலையிலும், அந்த நபர் எதையும் உணராமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்தவர்களால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்களோ அல்லது அந்த நபரின் தற்போதைய நிலை குறித்த விவரங்களோ வெளியாகவில்லை என்றாலும், இந்த வீடியோ பார்ப்பவர்களை நெஞ்சை பதற வைத்துள்ளது.
