பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக மறைமுக தகவல் போரை நடத்தி வந்த சீனாவின் போலி பிம்பத்தை, இந்திய நெட்டிசன்கள் தங்களது 1 ஜிபி மொபைல் டேட்டாவை மட்டுமே கொண்டு சமூக வலைதளங்களில் அடியோடு தகர்த்தெறிந்துள்ள சம்பவம் சர்வதேச புவிஅரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனச் சமூகத்தில் நிலவும் வறுமை, சேரிகள் மற்றும் அங்கு கடைப்பிடிக்கப்படும் ‘ஸீ, நோங், கோங், ஷோங்’ ஆகிய நான்கு சாதிப் பிரிவுகளையும், கிராமப்புற மக்களைத் தனிமைப்படுத்தும் கொடூரமான ‘ஹுகோ’ அரசாங்கப் பதிவு முறையையும் இந்திய மக்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்த சீனாவின் அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ இது பொய் எனப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளது.
இந்தியர்களுக்கு ஆதரவாகத் தற்பொழுது தைவானியர்களும் சீனாவின் சமத்துவமின்மையைச் சுட்டிக்காட்டி வீடியோக்களை வெளியிடத் தொடங்கியுள்ள சூழலில், விரக்தியடைந்த சீனா, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள சில செல்வாக்கு மிக்க நபர்களுக்கு நிதியுதவி அளித்துத் தங்களுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட வைப்பதாகப் பகீர் புகார்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, ரஷ்ய அதிபர் புதினின் வழிகாட்டியான அலெக்சாண்டர் டுகின், “இந்திய கலாச்சாரம் பொருள் உலகத்தைப் பற்றியோ லாபத்தைப் பற்றியோ சிந்திப்பதில்லை; இந்துக்கள் மிக உயர்ந்த அளவிலான மெய்யியல் சிந்தனையை வளர்த்துள்ளனர்” என இந்திய மற்றும் இந்துக்களின் ஆன்மீக பலத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
