வீட்டின் உள்ளே, அதுவும் ஏசி இயந்திரத்தின் மீது இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்து ஒரு குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரவில் வீட்டின் ஜன்னல் திறந்து இருந்ததால், குளிர்ச்சியான இடத்தைத் தேடி உள்ளே நுழைந்த அந்தப் பாம்புகள், விடியற்காலையில் குடும்பத்தினர் கண்ணில் பட்டுள்ளன. பாம்புகளைக் கண்டதும் பயந்துபோன அந்த குடும்பத்தினர், உடனடியாக அறையை விட்டு வெளியேறி வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

வனத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, மிகுந்த கவனத்துடன் அந்த இரண்டு மலைப்பாம்புகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில், பலர் இது மிகவும் அச்சமூட்டும் காட்சியாக இருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

அதே சமயம், சிலர் இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

கோடை மற்றும் மழைக்காலங்களில் பாம்புகள் பாதுகாப்பான இடங்களைத் தேடி வீட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதால், ஜன்னல்கள் மற்றும் கதவுகளைச் சரியாக மூடி வைக்குமாறும், கவனத்துடன் இருக்குமாறும் மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.