சமூக வலைதளங்களில் தற்போது ஒரு போலி மின்னஞ்சல் வைரலாகி வருகிறது. ஒரு நிறுவனத்திற்குத் தனது நண்பரைப் பரிந்துரை செய்த ஊழியருக்கு, அந்த நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில், “உங்கள் நண்பர் மிக மோசமாகத் தேர்வு எழுதினார், எனவே உங்கள் திறமையின் மீதே எங்களுக்குச் சந்தேகம் வந்துள்ளது.
அதனால், உங்களையே மீண்டும் ஒரு தொழில்நுட்ப நேர்காணலுக்கு வருமாறு அழைக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது நகைச்சுவைக்காகப் பகிரப்பட்ட ஒரு போலி பதிவு என்றாலும், வேலை வாய்ப்புப் பரிந்துரைகளை வழங்கும் ஊழியர்கள் சந்திக்கும் மறைமுக அழுத்தத்தை இது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த நகைச்சுவையான பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஒருவருக்குப் பரிந்துரை செய்வது என்பது வெறும் ரெஸ்யூம் அனுப்புவது மட்டுமல்ல, நம்முடைய நற்பெயரையே பணயம் வைப்பது போன்றது” என்று பல ஊழியர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Referred a friend for a job
Now HR wants to interview me again 😭 pic.twitter.com/gNuhDy901F
— aditii (@aditiitwt) June 18, 2026
“>
சிலர், நண்பர்கள் மோசமான நேர்காணல் செய்து, தங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்திய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, இன்னும் சிலர் இது போன்ற சூழ்நிலைகளை எப்படி நகைச்சுவையுடன் கையாள்வது எனப் பரிந்துரைக்கின்றனர்.
ஒருவரின் திறமைக்கு நாம் பொறுப்பேற்கும்போது, அது நம்முடைய வேலையையே பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை இந்த வைரல் பதிவு பலருக்கு ஏற்படுத்தியுள்ளது.
