ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த 77 வயது முதியவர் தானா ராம் கத்வாசரா, கடந்த 21 ஆண்டுகளாக பாலைவனச் சாலையில் பயணிக்கும் அந்நியர்களுக்குத் தாகம் தீர்க்கும் மனிதாபிமானப் பணியைச் செய்து வருகிறார். கோடைகாலத்தில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் அந்த வறண்ட பகுதியில், பேருந்து பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குத் தினமும் குளிர்ந்த குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கி வருகிறார்.
எந்தவித விளம்பரமோ, நன்கொடை எதிர்பார்ப்போ இன்றி, கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து அவர் செய்து வரும் இந்தச் சேவை பலருக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
இவருடைய இந்த மகத்தான சேவையை @desertslife என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோ உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பணம் கொடுத்தால் கூட ஒரு குவளை தண்ணீர் கிடைக்காத இன்றைய பரபரப்பான உலகில், தனது சொந்த முயற்சியால் பயணிகளின் தாகத்தைத் தணிக்கும் இவரின் செயல் பல நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
எவ்வித பிரதிபலனும் பாராமல், நீண்ட காலமாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இந்தத் தன்னலமற்ற சேவை, மனிதாபிமானம் இன்னும் அழியவில்லை என்பதை உலகுக்கு உரக்கச் சொல்கிறது.
