கிரேட்டர் நொய்டா அருகே உள்ள கிழக்கு புற விரைவுச்சாலையில், ஆர்.டி.ஓ அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் இருக்க, அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் சாலையில் பெரிய கற்களைக் கொட்டியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாகச் சென்ற டஜன் கணக்கான வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி, பயணிகள் நடுவழியில் சிக்கித் தவித்தனர்.

வெயில் சுட்டெரிக்கும் சூழலில், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

தகவலறிந்த தத்ரி காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் கற்களை அகற்றி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு அங்கேயே பஞ்சர் பார்க்கும் வசதிகளையும் செய்து கொடுத்து, பயணிகளுக்கு உதவினர்.

“>

 

இது போன்ற அதிவேகச் சாலையில் கற்களைக் கொட்டியது மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுத்திருக்கும் என்று எச்சரித்துள்ள அதிகாரிகள், இதற்கு காரணமான லாரி ஓட்டுநர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.