சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாய் பரவி, பார்ப்பவர்களை கடும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஓடும் இரயிலில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், சிவப்பு நிற சட்டை அணிந்த நடுத்தர வயது நபர் ஒருவர், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், பொது ஒழுக்கத்திற்கு எதிராகவும் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.

மேலும் இவரின் இந்த மோசமான செயலைக் கண்டு அருகில் இருந்த பயணிகள் முகம் சுளித்ததோடு, அங்கிருந்த ஒருவர் அதைத் தன் மொபைல் போனில் ரகசியமாகப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

இதனால் “பொது இடங்களில், அதுவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் இரயிலில் இப்படிப்பட்ட நபர்கள் எப்படி தைரியமாக அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்?” என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், வீடியோவில் இருக்கும் அந்த ‘சிவப்பு சட்டை அங்கிள்’ மீது இரயில்வே காவல்துறையினர் கடுமையான சட்டப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் மத்தியிலிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.