உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், தன்னை நொய்டாவில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு போலீசாரையே மிரட்டிய போலி அதிகாரி ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் “அவர் என் சகோதரர் அல்ல, அவர் சார்… அவருக்கு சல்யூட் செய்யுங்கள்,” என்று அந்த நபருடன் வந்த பெண் ஒருவர் காவல்துறையினரிடம் ஆணவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையினரை கண்டதும் தனது போலி அதிகாரத் தோரணையை காட்டி, தனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அந்த நபர் உத்தரவிட்ட சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், அந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த நிஜமான காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்பதும், காவலர்களை ஏமாற்றி மிரட்டுவதற்காக இவ்வாறு நாடகமாடியதும் அம்பலமானது.
இதனையடுத்து, அந்த போலி ஐபிஎஸ் அதிகாரியை லக்னோ போலீசார் கைது செய்து, உரிய முறையில் அவருக்கு சட்டப்படியான பாடத்தைக் கற்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
