திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ஆபத்தான போதைப்பொருட்களின் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், அதில் ஈடுபடும் நபர்கள் மீது எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டாமல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளைக் கைது செய்யும்போது எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் (அரசியல் பிரஷர்) அதிகாரிகள் இடம் கொடுக்கக் கூடாது என்றும், சட்டவிரோத போதை மாஃபியா கும்பலை உடனடியாகக் கைது செய்து அவர்கள் மீது பாய்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் காவல்துறை மற்றும் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாகக் கட்டளையிட்டுள்ளார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எடுத்துள்ள இந்த கறாரான அதிரடி ஆக்ஷன் தற்போது திருவண்ணாமலை ஏரியாவிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
