டெல்லி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்புவதற்கு முன்பாக, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்வூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்குத் தற்பொழுது அதிரடியாகச் சென்று சிறப்புச் சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு, குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்த பின், இன்று மதியம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்.
விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களின் ஆரவாரத்திற்கு இடையே, அங்கிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரமுள்ள உடுப்பி மாவட்டத்தின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு அசுர பாதுகாப்புடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.
இசட் பிளஸ் (Z+) பாதுகாப்புப் பிரிவில் இருக்கும் முதல்வர் விஜய்க்காகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீசார் இணைந்து மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்ததோடு, அவர் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் பொதுமக்களுக்குச் சிறிய தரிசன நேர மாற்றங்களையும் கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
முன்னதாக தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர், ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பதவியேற்ற பின் இக்கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்திய வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில், தற்பொழுது 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின் முதல்வர் விஜயும் இக்கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் தற்பொழுது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
