சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களுக்காக ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட்களை செய்வது சமீபகாலமாக இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டிருந்த பெண்களைக் கவர்வதற்காக மிகவும் ஆபத்தான முறையில் தனது பைக்கை ஓட்டி ஸ்டண்ட் செய்துள்ளார்.

மேலும் சற்றும் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த பைக், அங்கிருந்த பெட்ரோல் வழங்கும் இயந்திரத்தின் மீது மிக பலமாக மோதியது. இந்த அதிர்ச்சிகரமான மோதலின் காரணமாக, அந்த பெட்ரோல் இயந்திரம் முற்றிலும் சேதமடைந்து கீழே விழுந்தது. பெட்ரோல் பங்க் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு உணர்திறன் மிக்க இடத்தில், இந்த விபத்தால் பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உருவானது.

“>

இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அங்கு நின்றிருந்த மக்கள் மற்றும் பெண்கள் இந்த சம்பவத்தைக் கண்டு அலறியடித்துக்கொண்டு ஓடினர். “பெண்களிடம் கெத்து காட்ட நினைத்து, மொத்த மானத்தையும் இழந்து, ஆபத்தையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்” என இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் அந்த இளைஞரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.