இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வைரலாக வேண்டும் என்ற மோகமும், டாலர் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியும் தற்போது பலரிடமும் பைத்தியக்காரத்தனத்தின் எல்லைக்கே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘ரக்‌ஷனா குர்ஜார்’ (Rachna Gurjar) என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் ஐடியைக் கொண்ட இளம்பெண் ஒருவர், வியூஸ்களுக்காகத் தனது ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாகப் பதிவிட்டு, தற்போது ஒட்டுமொத்த நகைகளையும் பறிகொடுத்துவிட்டுப் புலம்பும் அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் தன்னிடம் உள்ள ஏராளமான தங்க நகைகள் மற்றும் சொகுசு கார்களைக் காட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த திருடர்களுக்கு, இவரிடம் இவ்வளவு தங்க நகைகள் இருக்கிறதா என்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சமயம் பார்த்து அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், அலமாரியை உடைத்து அங்கிருந்த அனைத்து தங்க நகைகளையும் திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

“கடவுள் நமக்குத் தாராளமாகப் பணத்தையோ, நகையையோ கொடுத்திருந்தால் அதை அமைதியாக அனுபவிக்க வேண்டுமே தவிர, இப்படிப் பொதுவெளியில் காட்சிப் பொருளாகக் காட்டக் கூடாது” என்றும், இந்தச் சோசியல் மீடியா மோகம் தான் இப்போதைய பல விபரீதங்களுக்குக் காரணம் என்றும் நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைத்து வறுத்தெடுத்து வருகின்றனர்.