“தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய தவெகஆட்சி குறித்து திமுக மூத்த தலைவரும் எம்பியுமான டி.ஆர்.பாலு கொரட்டூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசியுள்ள பேச்சு, கோட்டை வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

‘தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் தவெக ஆட்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது; மிக விரைவில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும்’ என அதிரடியாகக் கொளுத்திப் போட்டுள்ளார்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்டப்பேரவைக்குள் செல்ல முடியாத ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதாகவும், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேர் மட்டுமே தற்போது பேரவைக்குள் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இதற்காக திமுகவினர் யாரும் சற்றும் கலங்கிவிடக் கூடாது எனத் தொண்டர்களுக்கு தைரியம் ஊட்டினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ‘இந்த தவெக ஆட்சி ஏன் நீடிக்காது என்பதற்கான மிக மகிழ்ச்சியான காரணங்கள் சில என்னிடம் உள்ளன; ஆனால் அதை இந்த பொது மேடையில் பகிரங்கமாகச் சொல்ல முடியாது, என்னிடம் தனியாக வந்து கேட்டால் அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்’ என ஒட்டுமொத்த அரசியல் உலகையுமே சீட்டின் நுனிக்கு வரவைக்கும் வகையில் ஒரு பகீர் சஸ்பென்ஸை உடைத்துப் பேசியிருப்பது தற்போதைய  விவாதமாக மாறியுள்ளது.”

“>