பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன்  சமய் ரெய்னாவின் ‘இந்தியாஸ் காட் லேட்டண்ட்’ என்ற நிகழ்ச்சியில், யூடியூபர் ரன்வீர் அலகாபாடியா பேசிய சர்ச்சை கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தால் கடந்த ஓராண்டாக பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து மௌனம் காத்து வந்த இருவரும், தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளனர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண இருவரும் மைதானத்திற்கு வந்திருந்தது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், நேரலையின் போது கேமரா இவர்களை நோக்கி திரும்பியவுடன், இருவரும் கைகளால் ‘ஹார்ட்டின்’ வடிவம் காட்டி, திடீரென ஒருவருக்கொருவர் உதட்டோடு உதடு முத்தம் (Lip Kiss) கொடுத்துக் கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

View this post on Instagram

 

A post shared by India Buzz 🇮🇳 (@ind.buzz)

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் இவர்களது நெருக்கத்தைக் கண்டு வாயடைத்துப் போனதோடு, பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். ஆனால், தீவிர ஆய்வுக்குப் பிறகு இந்த வீடியோவின் உண்மைத் தன்மை தற்போது அம்பலமாகியுள்ளது. சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் இதனைத் தவறாக உருவாக்கியுள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் தவறுகளால் பிரபலங்களின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இந்த டீப்ஃபேக் கலாச்சாரம் இணையவாசிகளிடையே தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.