நாம் செய்யும் வேலையை ரசித்துச் செய்யும்போது அதுவே ஒரு தனித்துவமான கலையாக மாறிவிடும் என்பதற்கு இலக்கணமாக, வடமாநில கட்டுமானத் தொழிலாளி ஒருவர் காட்டியுள்ள அசத்தலான திறமை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு இணையத்தில் படுவேகமாகப் பரவி வரும் இந்த வைரல் வீடியோவில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ஒருவர், கட்டிடத்தின் புதிய மொட்டை மாடியில் போடப்பட்டுள்ள ஈரமான சிமெண்ட் கலவையை (Concrete Slab) மிகவும் லாவகமாகச் சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
जब काम ही आपका टैलेंट बन जाए pic.twitter.com/FQJvEl5hSm
— meenakshi bhat (@arikab03) June 1, 2026
வழக்கமாக அனைவரும் கஷ்டப்பட்டுச் செய்யும் இந்த வேலையை, அவர் ஒரு நீண்ட இரும்பு பைப் அல்லது ரோலரைத் தனது காலுக்கு அடியில் வைத்துக் கொண்டு, அதன் மீதே அற்புதமாகத் தனது உடல் எடையைச் சமநிலைப்படுத்தி (Balance) முன்னும் பின்னும் வழுக்கியபடி நகர்ந்து மிகவும் துல்லியமாகத் தரையை வழவழப்பாக்குகிறார்.
ஒரு கையில் சிமெண்ட் வாளியைச் சுமந்து கொண்டு, ஈரத் தரையில் காலடி தடம் பதியாதவாறு அவர் காட்டும் இந்த அசாத்தியக் கட்டுப்பாடும் திறமையும் பார்ப்பவர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
“வேலையே உங்களது திறமையாக மாறும்போது இதுதான் நடக்கும்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த எளிய மற்றும் எதார்த்தமான தொழிலாளியின் வைரல் வீடியோ, தற்பொழுது ஒட்டுமொத்த நெட்டிசன்களின் பாராட்டுகளையும் அள்ளி இணையம் எங்கும் செம ட்ரெண்டாகி வருகிறது.
