தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துப் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன. இந்த அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய அண்ணாமலை, ‘இது நம்ம இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தங்களது கட்சி அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ள அண்ணாமலையின் இந்த புதிய இயக்கத்தில், கட்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
மறுபுறம், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். மாற்றத்தை விரும்பும் சாமானிய மக்கள் முதல் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் யோசனைகளையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடிய புதிய உள்ளூர் தலைவர்களை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த இயக்கத்தில் இணைய விரும்புவோர் 7550080515 என்ற அலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
An Important Announcement https://t.co/IcEnfaZGRK
— K.Annamalai (@annamalai_k) June 5, 2026
“>
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகக் கூறி, பின்னர் உடல்நலக் காரணங்களால் பின்வாங்கிய நிலையில் லதா ரஜினிகாந்தின் இந்த புதிய இயக்கம் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
