தமிழக அரசியல் வட்டாரத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்து ஹாட் டாபிக்காக மாறி வரும் வேளையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ள இந்த அதிரடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போளூர் குன்னத்தூர் பகுதியில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் ஒரு தனியார் கல்குவாரியில், போளூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ அபிஷேக் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஏதோ நக்கலாகப் பேச, அங்கேயே ஸ்பாட்டிலேயே காய்ச்சி எடுத்துவிட்டார் எம்.எல்.ஏ!

“இந்த நக்கல் எல்லாம் இங்க வேண்டாம்.. அதிகாரிங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சிகோங்க.. பணிவா பேசுனா தான் வேலை நடக்கும்” என்று தவெக எம்.எல்.ஏ அபிஷேக் அந்த ஊழியரை செம டோஸ் விட்டுள்ளார்.

கட்சி ஆரம்பித்த புதிதிலேயே தவெக எம்.எல்.ஏ ஒருவரின் இந்த அதிரடி ஆக்‌ஷன், உள்ளூர் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது!

“>