“எந்த பேரத்துக்கும் சோபா செட் இருக்கும் பதவிக்கு நாங்க ஆசைப்படல.! தேர்தலுக்கு அப்புறம் அந்தர் பல்டி அடிக்க மாட்டோம்!” — தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த திருப்பங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியான ஒரு அரசியல் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

” எந்தவொரு பேரத்திற்கோ, அல்லது சோபா செட் இருக்கும் சொகுசு பதவிக்கோ தேமுதிக என்றுமே ஆசைப்படாது” என்று திட்டவட்டமாகப் பேசியுள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன்னாடி ஒரு கூட்டணி, ஜெயிச்சதுக்கு அப்புறம் சுயநலத்துக்காக வேறொரு கூட்டணி என அந்தர் பல்டி அடிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடு தேமுதிகவுக்கு எப்போதுமே கிடையாது என்றும், தற்போதைய திமுக கூட்டணியில் தொடர்வது என்ற முடிவில் தேமுதிக இரும்புப் பிடியாக, உறுதியாக உள்ளது என்றும் பிரேமலதா  பேசியுள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக் கணக்குகளைப் பற்றிப் பேசும் மற்ற கட்சிகளுக்கு, பிரேமலதாவின் இந்த அதிரடி ஸ்டேட்மெண்ட் செம ‘செக்’ வைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன!