தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள பேட்டி சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “எந்தவொரு பேரத்திற்கும், பதவிக்கோ அல்லது சோஃபாவுக்கோ ஆசைப்படாத தமிழ்நாட்டின் ஒரே நேர்மையான கட்சி தேமுதிக மட்டும்தான்” என அதிரடியாகத் தொடங்கிய அவர், விஜய்யின் தவெக-வை நோக்கி நேரடியாகக் கடுமையான சாடல்களை முன்வைத்தார்.

“அரசியல் மேடைகளில் யாரை ‘தீய சக்தி’ என தவெக விமர்சித்ததோ, அதே தீய சக்தியின் (திமுக) ஆதரவோடுதான் இன்று தமிழ்நாட்டில் ஆட்சியே நடந்து வருகிறது” என்று தவெக-வின் அரசியல் நிலைப்பாட்டை அடியோடு தோலுரித்துக் காட்டினார். மேலும், புதிய கட்சி என்பதால் விஜய்யை விமர்சிப்பதில் ‘ஹனிமூன் பீரியட்’ (Honeymoon Period) சலுகை தர வேண்டுமா என்ற கேள்விக்கு, “விமர்சிப்பதில் ஹனிமூன் பீரியட் எல்லாம் பார்க்க முடியாது; தற்போதைய சூழலை மக்கள் ‘அவதி கால பீரியட்’ என்றுதான் நினைத்துக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்” எனப் பிரேமலதா மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.

தவெக மற்றும் ஆளுங்கட்சியான திமுக ஆகிய இரு தரப்பையும் ஒரே நேரத்தில் குறிவைத்து, பிரேமலதா விஜயகாந்த் ஆக்ரோஷமாக முழங்கியுள்ள இந்த அரசியல் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் செம டாக்-ஆஃப்-தி-டவுனாக மாறி விவாதங்களை அனல் பறக்க விட்டுள்ளது.