தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் கூட்டணிக் கட்சிகள் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ள அதிரடி பேச்சு தமிழக அரசியல் களத்தில் மிகப்பொரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காத போது, தவெக தங்களை ரகசியமாக அணுகியதாகப் பிரேமலதா மேடையிலேயே ஓப்பனாக உடைத்துள்ளார்.

மேலும், “நான் மட்டும் அன்று ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய் எனது வீடு தேடி ஓடிவந்து எனக்குத் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்” என அவர் பேசியுள்ள உச்சக்கட்ட பரபரப்பு கருத்து, சோஷியல் மீடியாவில் டாப் டிரெண்டிங்காக மாறியுள்ளது. தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளை மிகக் காரசாரமாகச் சாடிய பிரேமலதா, தமிழ்நாட்டில் அமைச்சர் பதவிக்காகச் சில கட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன, ஆனால் தேமுதிக என்றுமே பதவிக்கு ஆசைப்படும் கட்சி அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளை அவர் மறைமுகமாக அடியோடு வறுத்தெடுத்துள்ளார். தவெக-வின் அரசியல் நகர்வுகளையும், ஆளுங்கட்சி கூட்டணியின் பலவீனத்தையும் ஒரே மேடையில் பிரேமலதா விஜயகாந்த் தோலுரித்துக் காட்டியுள்ள இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.