கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் முன்பதிவு செய்த பேருந்து முக்கால் மணி நேரமாகியும் வராததால், அங்கிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் புகார் அளித்த இளைஞருக்கு அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ் வரவில்லை என அந்த பயணி நியாயமாகக் கேள்வி எழுப்பிய போது, அதற்கு தீர்வு சொல்ல வேண்டிய அமைச்சர், சம்பந்தமே இல்லாமல் “தம்பி நீ நல்லா சாப்பிட்டப்பா.. நான் இன்னும் சாப்பிடல” என மேடையில் பேசுவது போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கிருந்த பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
#WATCH | புக் பண்ண பஸ் முக்கால் மணி நேரமா வரல..கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி – அமைச்சர் சொன்ன பதில்#tvk #Kilambakkam #ministerparthiban #News18TamilNadu pic.twitter.com/KKt6zi29yg
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 28, 2026
இந்த விசித்திரமான வாக்குவாதம் தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து அமைச்சருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. “பொதுமக்கள் தங்களின் அவசரப் தேவைக்காகவும், போக்குவரத்துப் பிரச்சனைக்கும் தீர்வு கேட்டால் ஒரு பொறுப்பான அமைச்சர் அளிக்கும் பதில் இதுதானா?” என்று சமூக வலைத்தளங்களில் வாசகர்கள் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பி இந்த செய்தியை செம ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
