தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் நீடிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனக்கு கட்சியைத் தாண்டி எனது தொகுதி மக்கள் தான் மிக முக்கியம். என் மீது முழு நம்பிக்கை வைத்து மக்கள் என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர்” என்று கூறி அதிரடி சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தன்னை வெற்றிபெற வைத்த மக்களின் நிலைப்பாட்டைக் கேட்பது ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தனது கடமை என்றும், தற்போது அனைவரின் கருத்துகளையும் தான் முழுமையாக உள்வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “மக்களின் முடிவே, எனது இறுதி முடிவு” என்று அவர் ஓப்பனாகப் பேசியிருப்பது, அவர் விரைவில் அதிமுகவில் இருந்து விலகி மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்ற விவாதத்தை கிளப்பியுள்ளதுடன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமைக்கு அடுத்த பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
