நீதிமன்றத்தில் வாதாடும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள் மற்றும் நாகரிகம் மிகவும் முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில், கோர்ட்டில் நடந்த சுவாரசியமான மெகா பஞ்சாயத்து வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர டிரெண்டாகி வருகிறது.

எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் வெறும் 8 நொடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோவில், இளம் வயது ‘2K கிட்ஸ்’ (Gen Z) வக்கீல் ஒருவர், நீதிபதி கேட்ட கேள்விகளுக்குப் பதிலாகத் தொடர்ந்து இங்கிலீஷில் ‘யா.. யா..’ (Yeah.. Yeah..) என்று அலட்சியமாகப் பதில் அளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by AtArani Law Academy ⚖️ (@ataranilaw.academy)

இதனால் செம கடுப்பான நீதிபதி, “நீ எங்கிருந்து வருகிறாய்? இந்தூரில் இருந்தா? இந்தூரில் எல்லாரும் இப்படித்தான் ‘யா யா’ என்று பேசிக் கொண்டிருப்பார்களா? பாதி இந்தி, பாதி இங்கிலீஷ் பேசிட்டு, அதுலயும் ‘யா யா’ என்கிறாய்” என்று நீதிமன்றத்திலேயே அந்த வக்கீலை வளைத்து வளைத்துக் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளார்.

மேலும், “நீ ஒன்றும் காபி ஷாப்பிலோ அல்லது கஃபே கடையிலோ அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்கவில்லை, இது நீதிமன்றம்! ஒழுங்காகப் பேசத் தெரிய வேண்டும். இன்னொரு முறை உன் வாயில் இருந்து ‘யா’ என்ற வார்த்தை வந்தால், உன்னுடைய ஃபைலை அப்படியே க்ளோஸ் செய்து உன்னிடமே திருப்பி அனுப்பிவிடுவேன்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்து, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து அதிரடி உத்தரவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் பேசும் போது மிகவும் மரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், ‘யா’ போன்ற கேஷுவலான வார்த்தைகள் அலட்சியப் போக்கைக் காட்டுவது போல் இருக்கும் என்றும் நீதிபதியின் கோபத்திற்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் தங்களது கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர்.