நீண்ட காலமாக மேலைநாடுகளுக்குக் குடிபெயர்வது என்பது பலரது வாழ்நாள் கனவாக இருந்து வந்தது. பனிப்பொழிவு, விமான நிலையப் புகைப்படங்கள் மற்றும் வெளிநாட்டுப் பணம் போன்ற நல்ல விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக வெளிநாடுகளில் வாழும் இளம் இந்தியர்கள் அங்கு எதிர்கொள்ளும் மனரீதியான போராட்டங்களைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர்.
சென்னைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் கனடாவில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டு நிரந்தரமாக இந்தியா திரும்பியதாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“நம்முடன் யாரும் இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்? கனடா ஒரு மன அழுத்தத்தைத் தரும் நாடு” என்று அவர் கூறியிருப்பது, வெளிநாடுகளில் ஆதரவின்றி, கடுமையான குளிர்காலத்தில் வேலை தேட முடியாமல் தவிக்கும் பல புலம்பெயர்ந்தோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேநேரம், சுதர்சனின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. வெளிநாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடாவை விட்டு இந்தியா திரும்பிய ஒருவர், நாம் மகிழ்ச்சியாக இருக்கும் சொந்த நாட்டிலேயே கடினமாக உழைத்துச் சாதிக்கலாம் என்று சுதர்சனை ஆதரித்துள்ளார்.
View this post on Instagram
“>
ஆனால், மற்றொரு தரப்பினர் பணம் இல்லை என்றால் எந்த நாடும் மன அழுத்தத்தைத்தான் தரும் என்றும், சுத்தமான காற்று, தண்ணீர் போன்ற வசதிகளைப் பெற சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.
மேலும் சிலர், சுதர்சன் கடினமாக உழைக்க விரும்பாமல் குறுக்கு வழியில் பணக்காரராக முயன்று தோற்றுவிட்டதாகவும், அவர் விரைவில் மீண்டும் கனடாவுக்கே திரும்பிவிடுவார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
