பெங்களூரு அக்கிபேட்டையில் நள்ளிரவில் சாலையில் படுத்திருந்த பசு மாட்டிடம் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஷாபாஸ் ஆலம் (24) என்ற டெலிவரி ஊழியரை பெங்களூரு நகர போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த மே 5-ஆம் தேதி அதிகாலை 1.47 மணியளவில் காட்டன்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த விபரீத சம்பவம், மே 17 அன்று எக்ஸ் (X) தளத்தில் சிசிடிவி வீடியோ ஆதாரத்துடன் வெளியான பிறகே வெளிச்சத்திற்கு வந்தது.

​வீடியோவைப் பார்த்த காட்டன்பேட்டை போலீஸார் உடனடியாக தானாக முன்வந்து (Suo motu) வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வத்து சில மணி நேரங்களிலேயே குற்றவாளியை வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் தனது வக்கிர புத்தியால் இந்தச் செயலைச் செய்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS 325) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்!