பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம்) தனது நிறுவனத்தில் பணிபுரியும் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் மெட்டா நிறுவனத்தில் மொத்தம் 78,000 பணியாளர்கள் இருந்த நிலையில், தற்போது அதில் சுமார் 10% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப மெட்டா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், புதிய பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும் ‘ஹைரிங்’ (Hiring) செயல்முறையையும் மெட்டா நிறுவனம் முழுமையாக நிறுத்தி வைத்துள்ளது.
ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் சூழலில், மெட்டாவின் இந்த அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகையும் கலங்கடித்துள்ளது.
