கடலில் கம்பீரமாக மிதக்கும் பிரம்மாண்ட கப்பல்களை நாம் மேலிருந்து மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், அதன் அடிப்பகுதியில் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க தொழில்நுட்பத்தை ஒரு கப்பல் ஊழியர் வீடியோவாக வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கப்பல் பழுதுபார்ப்புக்காக (Dry Dock) தரைக்கு கொண்டு வரப்பட்டபோது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், எப்போதும் தண்ணீருக்கு அடியில் மூழ்கியிருக்கும் கப்பலின் ‘ஹல்’ (Hull) மற்றும் ராட்சத இறக்கைகள் எனப்படும் ‘புரொப்பல்லர்கள்’ (Propellers) காட்டப்பட்டுள்ளன.
View this post on Instagram
ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள கப்பலை கடலில் தள்ளிச் செல்லும் இந்த புரொப்பல்லரின் ஒரு பிளேடு மட்டுமே சுமார் 12 அடி நீளம் கொண்டது என்பது பார்ப்பவர்களை மலைக்க வைக்கிறது.
மேலும், கடல் பாசிகள் மற்றும் சிப்பிகள் ஒட்டாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் பூசப்படும் விசேஷ பெயிண்ட்கள் மற்றும் அதன் பிரம்மாண்ட இன்ஜின் இயக்கம் குறித்தும் அந்த ஊழியர் விளக்கியுள்ளார்.
கப்பலின் சொகுசு வசதிகளை விட, அதன் அடிப்பகுதியில் தான் உண்மையான இன்ஜினியரிங் வித்தை ஒளிந்திருக்கிறது என்பதை இந்த வீடியோ நிரூபித்துள்ளது.
